Sunday, December 22, 2024
Homeசினிமாஜெயம் ரவி-ஆர்த்தி விவாகரத்து வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.. இனி என்ன முடிவு?

ஜெயம் ரவி-ஆர்த்தி விவாகரத்து வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.. இனி என்ன முடிவு?


ஜெயம் ரவி

கோலிவுட் திரையுலகில் இப்போதெல்லாம் அதிகம் பிரபலங்களின் விவாகரத்து செய்திகள் அதிகம் வருகின்றன.

அப்படி வந்த செய்திகளில் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது ஜெயம் ரவி-ஆர்த்தி விவாகரத்து செய்தி.

நடிகர் இந்த செய்தியை அறிவித்ததும் நிறைய சர்ச்சைகள் எல்லாம் எழுந்தன, ஆனால் உடனே அதனை தெளிவுப்படுத்தி இருந்தார் ஜெயம் ரவி.

அதோடு சினிமா குறித்து என்ன வேண்டுமானாலும் கூறுங்கள் நான் மதிக்கிறேன், ஆனால் எனது சொந்த வாழ்க்கை பற்றி பேச யாருக்கும் உரிமை இல்லை என கூறியிருந்தார்.


விவாகரத்து

குடும்ப நல நீதிமன்றத்தில் ஜெயம் ரவி விவாகரத்திற்கு வழக்கு தொடர்ந்தார்.

இருவரையும் மனம்விட்டு பேச குடும்பநல நீதிமன்றம் அறிவுரை வழங்கியது. இதற்காக இருவரும் நீதிமன்றத்தின் ஆஜரான நிலையில் சமாதான பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.

ஜெயம் ரவி-ஆர்த்தி விவாகரத்து வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.. இனி என்ன முடிவு? | Jayam Ravi Aarthy Divorce Case Latest Report

மீண்டும் இருவருக்கும் இடையே சமாதான பேச்சு வார்த்தை நடக்க, மத்தியஸ்தர் தரப்பில் இருந்து சமரச பேச்சு வார்த்தை முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மீண்டும் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இணைய வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.

தற்போது இந்த வழக்கின் விசாரணையை ஜனவரி 18ஆம் தேதிக்கு தள்ளிவைத்து குடும்ப நல நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  

ஜெயம் ரவி-ஆர்த்தி விவாகரத்து வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.. இனி என்ன முடிவு? | Jayam Ravi Aarthy Divorce Case Latest Report

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments