Thursday, December 12, 2024
Homeசினிமாஜெயம் ரவி, ஜி.வி. பிரகாஷை தொடர்ந்து விவாகரத்தை அறிவித்த இயக்குனர் சீனு ராமசாமி.. அதிர்ச்சி பதிவு

ஜெயம் ரவி, ஜி.வி. பிரகாஷை தொடர்ந்து விவாகரத்தை அறிவித்த இயக்குனர் சீனு ராமசாமி.. அதிர்ச்சி பதிவு


சீனு ராமசாமி

ஜெயம் ரவி – ஆர்த்தி, ஜிவி பிரகாஷ் – சைந்தவி மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் – சைரா பானு எனத் தொடர்ந்து தமிழ் திரையுலக சேர்ந்த நட்சத்திரங்களின் விவாகரத்து செய்தி அதிர்ச்சியை கொடுத்து வருகிறது.

இவர்களைத் தொடர்ந்து, தற்போது பிரபல இயக்குனர் சீனு ராமசாமியும் தனது மனைவியுடன் விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.

கூடல் நகர் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சீனு ராமசாமி. பின் தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை என பல நல்ல படங்களைக் கொடுத்துள்ளார்.

விவாகரத்து 

இந்த நிலையில், 17 வருட திருமண வாழ்க்கைக்கு பின் விவாகரத்து முடிவை எடுத்துள்ளதாகத் தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்தப் பதிவில் “அன்பானவர்களுக்கு வணக்கம்
நானும் எனது மனைவி G S தர்ஷனாவும் எங்கள் 17 வருட திருமண வாழ்விலிருந்து விடைபெறுகிறோம். இருவரும் விருப்ப விவாகரத்து பெற்று அவர் அவருக்கு உண்டான திசையில் பயணிக்கவும், அந்தப் பாதையில் தர்ஷனாவின் செயல்பாடுகள் என்னையும், எனது செயல்பாடுகள் அவரையும் எவ்விதத்திலும் சேராது, பொறுப்பாகாது என்பதை நான் அறிவேன்.அவரும் அறிவார். இப்பிரிவுக்கு உதவும் படி சென்னை உயர்நீதி மன்றத்தை நாடியுள்ளோம். இருவரின் தனிப்பட்ட இந்த முடிவுக்கும் அதன் உரிமைக்கு மதிப்பளிக்கும் தங்களின் வாழ்த்துக்கள் எங்களுக்கு ஊக்கம்.” எனப் பதிவிட்டுள்ளார்.

ஜெயம் ரவி, ஜி.வி. பிரகாஷை தொடர்ந்து விவாகரத்தை அறிவித்த இயக்குனர் சீனு ராமசாமி.. அதிர்ச்சி பதிவு | Director Seenu Ramasamy Divorce With His Wife

இவருடைய இந்த விவாகரத்து செய்தி ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments