Tuesday, December 3, 2024
Homeசினிமாஜெயிலுக்கு போகாமல் தப்பித்த கோபி, அடுத்து பாக்கியலட்சுமி சீரியலில் நடக்கப்போவது என்ன?... வெளிவந்த போட்டோஸ்

ஜெயிலுக்கு போகாமல் தப்பித்த கோபி, அடுத்து பாக்கியலட்சுமி சீரியலில் நடக்கப்போவது என்ன?… வெளிவந்த போட்டோஸ்


பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி, விஜய் தொலைக்காட்சியில் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் தொடர்களில் ஒன்று.

ஒரு குடும்ப தலைவியின் கதை என்ற அடைமொழியோடு தொடங்கிய இந்த தொடர் இப்போதெல்லாம் டிஆர்பியில் சொதப்பி வருகிறது.

அதோடு கடந்த சில வாரங்களாகவே கோபியின் பழிவாங்கும் விஷயம் தான் நடந்து வருகிறது. தற்போது கோபி செய்த விஷயங்களை அறிந்து பாக்கியா அவரை கைது செய்ய வைத்துள்ளார்.

இன்றைய எபிசோடில் கோபியின் நண்பர் அவரை வெளியே எடுக்கிறார்.


படப்பிடிப்பு போட்டோ

இந்த நிலையில் ஈஸ்வரி, செழியன், எழில் மற்றும் ராதிகா ஆகியோர் மருத்துவமனையில் இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது.

எனவே கோபி உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருக்கலாம், அடுத்து இந்த காட்சிகள் தான் வரப்போகிறது என புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரவர் தோன்றிய கதையை கூறி வருகின்றனர். 



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments