இசைமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் என்றால் எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வருவது அவருக்கு ஆஸ்கார் விருது பெற்று கொடுத்த ஜெய் ஹோ பாடல் தான்.
உலக அளவில் அவரை பிரபலமாகியதும் அந்த படம் தான். ஆனால் அந்த பாடலை ரஹ்மான் முதலில் ஒரு ஹிந்தி டாப் ஹீரோவுக்கு தான் உருவாக்கினார் என்பது உங்களுக்கு தெரியுமா?
நிராகரித்த பாலிவுட்
அந்த பாடலை சல்மான் கானின் Yuvvraaj படத்திற்காக தான் ரஹ்மான் ஜெய் ஹோ பாடலை இசையமைத்தார். ஆனால் அந்த பாடல் வேண்டாம் என அவர்கள் கூறிவிட்டார்களாம்.
அதன் பிறகு அதை பிரிட்டிஷ் இயக்குனர் Danny Boyleக்கு கொடுத்து ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
அந்த பாடல் தான் ரஹ்மானுக்கு ஆஸ்கார் விருதும் பெற்றுக் கொடுத்தது.