நடிகை ராஷ்மிகா நேஷ்னல் கிரஷ் என சொல்லும் அளவுக்கு அதிகம் ரசிகர்களை வைத்திருக்கிறார். அனிமல், புஷ்பா 2 போன்ற படங்களில் மூலமாக ராஷ்மிகாவின் கெரியர் தற்போது உச்சத்தில் இருக்கிறது.
ராஷ்மிகா தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலித்து வருகிறார் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதை அவர்கள் ரகசியமாகவே வைத்து இருக்கின்றனர்.
சரியான நேரத்தில் காதலை அறிவிப்பதாக இருவருமே பேட்டிகளில் கூறி வருகின்றனர்.
ஜோடியாக ஏர்போர்ட் வந்த வீடியோ
இந்நிலையில் ராஷ்மிகா தனது காதலர் விஜய் தேவரகொண்டா உடன் ஒன்றாக ஏர்போர்ட் வந்திருக்கிறார்.
அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.