சிறகடிக்க ஆசை
தமிழ் சின்னத்திரை சீரியல்கள் என்றாலே விஜய் டிவியில் ரசிகர்களுக்கு முதலில் நியாபகம் வருவது சிறகடிக்க ஆசை தொடர் தான்.
காரணம் அந்த அளவிற்கு செம மாஸான கதைக்களத்துடன், விறுவிறுப்பான திருப்பங்களுடன் தொடர் ஓடிக் கொண்டிருக்கிறது.
என்ன விஷயம் என்றாலும் சட்டென்று வெளிச்சத்திற்கு வந்துவிடுகிறது, ஆனால் என்னவோ வில்லி ரோஹினியின் ஒரு விஷயம் கூட வெளியே கசியவே இல்லை, இது கொஞ்சம் ரசிகர்களுக்கு வருத்தமாக தான் உள்ளது.
மலேசியா மாமா விஷயத்தில் விரைவில் ரோஹினி சிக்குவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது, பொறுத்திருந்து காண்போம்.
முத்து-மீனா
இந்த தொடர் மூலம் தமிழக மக்களால் கொண்டாடப்படும் ஜோடிகளாக மாறியவர்கள் வெற்றி வசந்த் மற்றும் கோமதி ப்ரியா.
இருவரையும் வைத்து நிறைய கியூட்டான வீடியோக்கள், புகைப்படங்கள் எல்லாம் எடிட் செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் அதிகம் வலம் வருகிறது.
இந்த நிலையில் வெற்றி வசந்த் மற்றும் கோமதி ப்ரியா இருவரும் மலேசியா சென்றுள்ளனர்.
அங்கு ஒரு நிகழ்ச்சியில் இருவரும் கலந்துகொண்ட புகைப்படம் இப்போது சமூக வலைதளங்களில் அதிக லைக்ஸ் குவித்து வருகிறது.