சினிமாவில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக படிப்பை பாதியில் விட்டு வந்து உழைப்பாலும், திறமையாலும் இங்கு வெற்றி பெற்று ஜொலித்து கொண்டு இருக்கின்ற சினிமா நட்சத்திரங்கள் பலர்.
ஆனால், மருத்துவம் படித்து சினிமாவில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசையால் சினிமா துறைக்குள் வந்த நடிகைகள் குறித்து கீழே காணலாம்.
சாய் பல்லவி:
பிரேமம் என்ற மலையாள படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சாய் பல்லவி. பிறகு, தமிழ், மலையாளம், இந்தி என பல வெற்றி படங்களில் நடித்து சினிமாவில் பிரபல நடிகை என்ற பட்டத்தை வென்ற இவர் ஜார்ஜியாவில் எம்பிபிஎஸ் படித்து முடித்துள்ளார்.
அதிதி ஷங்கர்:
இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கரும் எம்பிபிஎஸ் படித்தவர் தான். ஆனால் சினிமா மேல் உள்ள ஆசையால் நடிக்க வந்து விட்டார்.
தமிழில் விருமன், மாவீரன் போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார். தற்போது விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ‘நேசிப்பாயா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
ஸ்ரீலீலா:
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ரீலீலா. இவர் எம்பிபிஎஸ் படித்த ஒரு டாக்டர்.
ஆனால் சினிமா மீது கொண்ட ஆசையால் டாக்டர் வேலையை பார்க்காமல் சினிமாவில் நடித்து கொண்டு இருக்கிறார்.