டான்ஸ் ஜோடி டான்ஸ்
ஜீ தமிழின் டான்ஸ் ஜோடி டான்ஸ் 3 ரீலோடட் நிகழ்ச்சி கடந்த மார்ச் 1ம் தேதி படு மாஸாக தொடங்கப்பட்டது.
விஜய் மற்றும் மணிமேகலை முதன்முறையாக ஜோடி சேர்ந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சினேகா, பாபா பாஸ்கர் மாஸ்டர் மற்றும் வரலட்சுமி ஆகியோர் நடுவர்களாக இருக்கிறார்கள்.
24 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டுள்ள இந்நிகழ்ச்சி சூப்பராக மக்களின் பேராதரவுடன் ஒளிபரப்பாகி வருகிறது.
சர்ப்ரைஸ்
இந்த நிகழ்ச்சியின் தனது சொந்த கதையை சொல்லி அனைவரின் கவனத்தையும் பெற்றவர் பஞ்சமி. இவரை நடிகர் சரத்குமார் தனது வீட்டிற்கு அழைத்து சாப்பாடு போட்டு அவரது குடும்பத்துடன் ஆட்டம் பாட்டம் என குஷிப்படுத்தியுள்ளார்.
அதோடு பஞ்சமியின் மகன்களின் படிப்பு செலவிற்காக ரூ. 1 லட்சம் பண உதவி செய்துள்ளார். சரத்குமாரின் இந்த செயலை கண்டு மக்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.