டிமான்டி காலனி 2
கடந்த 2015ம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் வெளியான படம் டிமான்டி காலனி.
இப்படம் நல்ல வரவேற்பை பெற 9 ஆண்டுகளுக்கு பிறகு இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது. அருள்நிதி, ப்ரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் நடிக்க அஜய் ஞானமுத்து படத்தை உருவாக்கியுள்ளார்.
சாம் சிஎஸ் இசையமைத்திருக்கும் இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது.
முதல் விமர்சனம்
வரும் ஆகஸ்ட் 15ம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில் படம் குறித்து முதல் விமர்சனம் வந்துள்ளது.
USA விநியோகஸ்தர் ஒருவர் தனது டுவிட்டரில் அஜய் ஞானமுத்து என்ன ஒரு கதைக்களம், கண்டிப்பாக இந்திய சினிமா இப்படம் குறித்து கண்டிப்பாக பேசும்.
மகாராஜா படத்திற்கு பிறகு நாங்கள் இந்த படத்தின் உரிமையை பெற்றிருப்பது சந்தோஷம் என பதிவு செய்துள்ளார்.