டீன்ஸ்
எப்போதும் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து இயக்கி வருபவர் இயக்குனர் பார்த்திபன்.இரவின் நிழல் படத்திற்கு பின் என்ன வித்தியாசமான கதைக்களத்தை எடுக்கப்போகிறார் என எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால், வித்தியசமாக அல்ல சற்று கமர்ஷியான ஒரு திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். சிறுவர், சிறுமிகளை வைத்து டீன்ஸ் எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இப்படம் முதல் நாள் எதிர்பார்த்த வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெறவில்லை. ஆனால், அடுத்தடுத்த நாட்களில் மக்களிடையே டீன்ஸ் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்க துவங்கியுள்ளது. பல திரையரங்கங்களில் கூடுதல் ஷோக்களும் இப்படத்திற்கு கிடைத்துள்ளதாம்.
வசூல்
இந்த நிலையில், தற்போது நல்ல வரவேற்பை பெற்று திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் டீன்ஸ் திரைப்படம் உலகளவில் ரூ. 95 லட்சத்திற்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.