தக் லைஃப்
மணி ரத்னம் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் ஹீரோவாக நடித்து வரும் திரைப்படம் தக் லைஃப். இப்படத்தில் சிம்பு, திரிஷா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு 60% சதவீதத்திற்கும் மேல் நிறைவடைந்த நிலையில் சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது. தக் லைஃப் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் நடித்து வருகிறார்.
படப்பிடிப்பில் விபத்து
இவர் ஏற்கனவே தமிழில் தனுஷ் நடிப்பில் வெளிவந்திருந்த ஜகமே தந்திரம் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தக் லைஃப் படப்பிடிப்பு Helicopter-ல் இருந்து குதிப்பது போன்ற காட்சியை எடுத்துள்ளனர்.
அந்த ஸ்டண்ட் காட்சியின் போது தான் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கிய நடிகர் ஜோஜு ஜார்ஜூக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.