அதர்வா முரளி
தென்னிந்திய சினிமாவில் 80 மற்றும் 90களில் கலக்கிய பலர் இப்போதும் நடிக்கிறார்கள், சிலர் சினிமா பக்கமே வரவில்லை. அப்படி ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த நடிகர்களில் ஒருவர் தான் முரளி, இதயம் முரளி என்று தான் எல்லோரும் அழைப்பார்கள்.
தமிழ் சினிமாவின் கருப்பு வைரமாக இருந்த முரளி கடந்த 2010ம் ஆண்டு திடீரென நெஞ்சுவலி எற்பட்டு உயிரிழந்தார். ஷோபா என்பவரை திருமணம் செய்த முரளிக்கு அதர்வா, ஆகாஷ் என்ற மகன்களும், காவ்யா என்ற மகளும் உள்ளனர்.
அதர்வா கடந்த 2010ம் ஆண்டு பானா காத்தாடி படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகி நடித்து வருகிறார், ஆனால் இதுவரை சரியான ஹிட் பெறவில்லை.
ஆகாஷ் படம்
இந்த நிலையில் முரளியின் இளைய மகன் ஆகாஷ், விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாகியுள்ள நேசிப்பாயா படத்தில் நடித்துள்ளார். அதிதி நாயகியாக நடித்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா தான் இசை.
இப்படத்தின் ஃபஸ்ட் லுக் விழாவில் நடிகர் அதர்வா பேசும்போது, இந்த நாள் என்னுடைய குடும்பத்திற்கு ரொம்ப சந்தோஷமான நாள்.
நான் சினிமாவில் அறிமுகம் ஆகும்போது என்னுடைய அப்பா முரளி இருந்தார், அவருடைய மனநிலை அப்போது என்னவாக இருந்தது என்று தெரியவில்லை.
இன்று ஆகாஷ் மேடையில் இருக்கும் போது நான் கீழே இருக்கிறேன், அப்பாவுடைய மனநிலையை இப்போதுதான் நான் உணர்ந்தேன். அப்பா இறந்தபோது என்னுடைய வீட்டில் எல்லோருமே உடைந்து போய் விட்டோம், அப்போது ஆகாஷ் சின்ன பையன்.
அவனுக்கு அப்போது என்ன நடக்கியது என்று புரிகிறதா இல்லையா என தெரியவில்லை, அவன் முன் அழக்கூடாது என்று இருந்தேன், ஆனால் ஒரு கட்டத்தில் உடைந்து அழுதுவிட்டேன்.
அப்போது அவன் என் கையை பிடித்துக்கொண்டு நாம் அம்மாவை நன்றாக பார்த்துக் கொள்ளலாம் என எனக்கு தைரியம் சொன்னார். இன்னைக்கு ஹீரோவாக வந்திருக்கிறான், சந்தோஷமாக உள்ளது என பேசியுள்ளார்.