சிவகார்த்திகேயன்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் SK 23 படத்தின் மீது பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து நடந்து வருகின்றனர்.
படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்து வர வில்லனாக பாலிவுட் நடிகர் வித்யுத் ஜம்வால் நடிக்கிறார்.
அண்மையில் இப்படத்தின் கதை அருமையாக இருந்ததாகவும் துப்பாக்கி படத்திற்கு பிறகு முருகதாஸுடன் இணைவது மகிழ்ச்சி என வில்லன் நடிகர் வித்யூத் கூறியிருந்தார்.
கியூட் போட்டோ
பட அப்டேட் வருமா என ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த நிலையில் சிவகார்த்திகேயன் தனது இன்ஸ்டாவில் கியூட்டான புகைப்படம் ஒன்று பதிவிட்டுள்ளார்.
அதாவது அவரது மகன் குகன் பிறந்தநாள் இன்று, செம கியூட்டான போட்டோவுடன் தனது மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.