ஐஸ்வர்யா ராய்
பாலிவுட் திரையுலகில் பிரபலங்கள் காதலிப்பதும், பின் பிரிவதும் வழக்கமாக நடக்கும் ஒரு விஷயம்.
அப்படி ரசிகர்கள் இவர்கள் கண்டிப்பாக இணைய வேண்டும் என ஆசைப்பட்டு அதிகம் கொண்டாடிய ஜோடி ஐஸ்வர்யா ராய் மற்றும் விவேக் ஓபராய்.
ஆனால் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர், ரசிகர்களுக்கு இது சோகத்தை கொடுத்தது என்றே கூறலாம்.
இருவருமே வெவ்வேறு திருமணம் செய்து சந்தோஷமாக உள்ளனர்.
விவேக் ஓபராய்
இந்த நிலையில் பல வருடங்களுக்கு பிறகு விவேக் ஓபராய், ஐஸ்வர்யா ராயுடனான காதல் பிரிவு குறித்து பேசியுள்ளார். அதில் அவர், பிரபலமாக இருப்பதன் கொடுமை உங்கள் காதல் முறிவு செய்தி எங்கும் பரவிவிடும்.
அந்த உறவில் இருந்து வெகுதூரம் வந்துவிட்டேன். காதல் தோல்வி நேரத்தில் என்னுடைய கோரிக்கையை கடவுள் காது கொடுத்து கேட்க மறுத்துவிட்டார்.
அதனால் தற்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன், ஐஸ்வர்யா ராயும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார், நல்ல வாழ்க்கைத் துணையை கண்டுபிடித்துள்ளார்.
யாராவது உங்கள் வாழ்க்கையை விட்டு வெளியேறினார் அதைப்பற்றி மாற்றி யோசியுங்கள். கையில் இருந்தது கீழே விழுந்துவிட்டது, புதிய துணை உங்களுக்கு கிடைக்கும் என பேசியுள்ளார்.