Thursday, December 12, 2024
Homeசினிமாதனுஷ் செய்தது அநியாயம், நான் ஒரே ஒரு போன் கால் தான் கேட்டேன்: நயன்தாரா

தனுஷ் செய்தது அநியாயம், நான் ஒரே ஒரு போன் கால் தான் கேட்டேன்: நயன்தாரா


நடிகை நயன்தாரா தனது திருமண ஆவண படத்தை நெட்பிலிக்ஸ் நிறுவனத்திற்கு ஒரு பெரிய தொகைக்கு கொடுத்து இருந்தார். திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகள் கழித்து தான் அது ரிலீஸ் ஆனது.

அந்த படத்தில் நானும் ரௌடி தான் படத்தின் பாடல் வரிகள், காட்சிகளை பயன்படுத்த அனுமதி பல முறை கேட்டும் தனுஷ் கொடுக்கவில்லை என நயன்தாரா குற்றம் சாட்டி இருந்தார். தனது திருமண வீடியோ வெளியாகும் இரண்டு நாட்கள் முன்பு அதை அவர் அறிக்கையாக வெளியிட்டு இருந்தார்.

அந்த வீடியோவுக்கு ப்ரோமோஷனாக தான் இந்த சர்ச்சையை கிளப்பினார் நயன்தாரா என நெட்டிசன்கள் ட்ரோல் செய்தனர். 

நயன்தாரா பேட்டி

இந்நிலையில் ஒரு பேட்டியில் நயன் தாரா இந்த சர்ச்சை பற்றி பேசி இருக்கிறார். “சரி என எனக்கு தோன்றும் விஷயத்தை செய்ய நான் ஏன் பயப்பட வேண்டும். நான் தவறு செய்தால் தான் பயப்பட வேண்டும். நான் பப்ளிசிட்டிகாக ஒருவரது இமேஜை கெடுத்தேன், படத்தின் PR-காக அதை செய்தேன் என்றெல்லாம் சொல்கிறார்கள். என் நோக்கம் அது அல்ல.”

“அவரது மேனேஜர், நண்பர்கள் மூலமாக பல முறை தனுஷை அணுகினோம். ஆனால் முடியவில்லை. விக்னேஷ் சிவன் படத்தில் எழுதிய நான்கு வரிகளை பயன்படுத்த அனுமதி கேட்டோம். அது எங்களுக்கு ரொம்ப பர்சனல்.”

“அந்த நான்கு வரிகள் எங்களது வாழ்க்கையை பிரதிபலிக்கும் என நான் நினைத்தேன். தனுஷ் முதல் ஆளாக ஓகே சொல்வார் என நினைத்தேன், அவர் எனது நண்பராக இருந்தார். ஆனால் கடந்த 10 வருடங்களில் அது மாறிவிட்டது.”

“அவருக்கு அவரது காரணங்கள் இருக்கலாம். நான் அவரது மேனேஜர் உடன் பேசினேன். என்ன தான் பிரச்சனை என தெரிந்துகொள்ள தனுஷ் உடன் போனில் பேச வேண்டும் என கூறினேன். ஒரே ஒரு போன் கால் தான் கேட்டேன்.”

தனுஷ் செய்தது அநியாயம், நான் ஒரே ஒரு போன் கால் தான் கேட்டேன்: நயன்தாரா | Nayanthara Talks About Fight With Dhanush

அநியாயம்..

“அவர் என் மீது கோபமாக இருக்கிறாரா, அல்லது சுற்றி இருப்பவர்கள் அதை உருவாக்குகிறார்களா என தெரிந்துகொள்ள நினைத்தேன். எதாவது misunderstanding இருந்தால் அதை பேசி சரி செய்துகொள்ளலாம் என விரும்பினேன். Best friends ஆக இருக்க வேண்டாம். ஆனால் எங்காவது நேரில் பார்த்தால் ‘ஹாய்.. எப்படி இருக்கீங்க’ என பேச முடியும். அப்படியாவது நட்பு இருக்க வேண்டும். அதற்காக தான் நான் முயற்சித்தேன்.”

“ட்ரெய்லரில் இருந்த ஷூட்டிங் ஸ்பாட் காட்சி எங்கள் போனில் எடுக்கப்பட்ட ஒன்று. அது அவரது footage, அவருக்கு உரிமை இருக்கிறது என சொல்கிறார்கள். நான் படத்தில் இருந்து எந்த காட்சியையும் எடுத்து பயன்படுத்தவில்லை. BTS காட்சிகள் எல்லாம் காண்ட்ராக்டில் இந்த காலத்தில் தான் வருகிறது. (அப்போது இல்லை).”

“தனுஷ் போன்ற ஒரு பெரிய நடிகர். பலரும் அவர் மீது மரியாதை வைத்திருக்கிறார்கள். எனக்கும் அவர் மீது மரியாதை இருக்கிறது. ஆனால் இந்த விஷயத்தில் தனுஷ் செய்தது அநியாயம். அதனால் தான் நான் பேசினேன்” என நயன்தாரா கூறி இருக்கிறார்.
 


 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments