புஷ்பா 2
தெலுங்கு திரையுலகில் நடிகராக அறிமுகமாகி, இன்று உலகளவில் தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார் நடிகர் அல்லு அர்ஜுன்.
இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த புஷ்பா 2 திரைப்படம் மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இயக்குநர் சுகுமார் இப்படத்தை இயக்க, ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடித்திருந்தார்.
மேலும் பகத் பாசில், அனுஷ்யா ஆகியோர் நடித்திருந்தார். தேவி ஸ்ரீ பிரசாத் பாடல்களுக்கு இசையமைக்க, சாம் சி.எஸ் பின்னணி இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக வசூல் விவரம்
உலகளவில் ரூ. 1050 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள புஷ்பா 2 திரைப்படம் தமிழ்நாட்டில், 7 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, புஷ்பா 2 திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டுமே 7 நாட்களில் ரூ. 52.5 கோடி வசூல் செய்துள்ளது.