ஹிந்தி திணிப்பு பற்றிய பிரச்சனை தான் கடந்த சில வாரங்களாக தேசிய அளவில் பேசப்படும் விஷயமாக இருந்து வருகிறது.
அது பற்றி பிரபலங்களும் கூட பலரும் தற்போது கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழர்களை தாக்கி பேசிய பவன் கல்யாண்
இந்நிலையில் இந்த விவகாரம் பற்றி தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் பேசி இருக்கிறார். தற்போது ஆந்திராவின் துணை முதலமைச்சராக இருக்கும் அவர் தமிழர்களை தாக்கி பேசியுள்ளார்.
“தமிழ்நாட்டில் ஹிந்தி எங்களுக்கு வேண்டாம் என சொல்கிறார்கள். ஹிந்தியை திணிப்பதாக சொல்கிறார்கள். அப்போது முதலில் உங்கள் படங்களை ஹிந்தியில் டப் செய்வதை நிறுத்துங்கள், வடக்கில் இருந்து டெக்னீஷியன்களை இங்கே கொண்டு வராதீர்கள்.. ஹிந்தி மக்கள் பணம் மட்டும் வேணுமா” என அவர் கேட்டிருக்கிறார்.
அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. இதோ.
Why don’t you guys Stop Dubbing your films into Hindi first?#PawanKalyan Questions the Hindi Hate coming out of TN. pic.twitter.com/yPKe5JT1uQ
— AndhraBoxOffice.Com (@AndhraBoxOffice) March 14, 2025