ராயன்
ராயன் படம் உலகளவில் வசூலை வாரிக்குவித்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் முதல் நாளில் இருந்தே இப்படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
தனுஷின் 50வது படமான இப்படத்தை அவரே இயக்கி நடித்துள்ளார். இப்படத்தில் அவருடன் இணைந்து துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், பிரகாஷ் ராஜ், அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
உலகளவில் இதுவரை ரூ. 90 கோடியை தொட்டுள்ள ராயன் திரைப்படம் தமிழ்நாட்டில் ஐந்து நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதை பற்றி பார்க்கலாம் வாங்க.
தமிழக வசூல்
ராயன் முதல் நாளில் இருந்தே தமிழக பாக்ஸ் ஆபிஸில் வசூல் வசூலை ஈட்டி வருகிறது. இது தனுஷின் கெரியரில் சிறந்த ஓப்பனிங் ஆக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், ஐந்து நாட்களில் ராயன் படம் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 46 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் என்னென்ன வசூல் சாதனைகளை செய்யப்போகிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.