GOAT
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் GOAT. ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது. பிகில் படத்திற்கு பின் விஜய்யுடன் ஏஜிஎஸ் நிறுவனம் கைகோர்த்தனர்.
வெங்கட் பிரபு இயக்கிய இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க பிரஷாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா, மீனாட்சி, யோகி பாபு, ஜெயராம் என பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
தமிழக வசூல்
கலவையான விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் வசூல் ரீதியாக GOAT படத்தில் தமிழ்நாட்டில் மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. Break even ஆன நிலையில், வசூல் வேட்டையை GOAT பட்டையை கிளப்பி வருகிறது.
இந்த நிலையில் 10 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள GOAT படம் தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 155 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. ரூ. 200 கோடியை நெருங்குமா என பொறுத்திருந்து பார்ப்போம்.