அஜித்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் வலம் வருபவர் அஜித். தற்போது இவர் நடிப்பில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகிறது.
அஜித்தின் சினிமா வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படம் என்றால் அது பில்லா தான். இந்நிலையில், பேட்டி ஒன்றில் ஆரம்பம் படத்தில் அஜித்துடன் பணியாற்றியது குறித்து இயக்குனர் விஷ்ணுவர்தன் பகிர்ந்துள்ளார்.
இயக்குனர் பேட்டி
அதில், ” ஆரம்பம் படத்தின் போது அஜித் என்னிடம் கதை கேட்கவே இல்லை நாம் ஒன்றாக வேலை செய்ய போகிறோம் என்று கூறி படத்தில் நடிக்க கமிட் ஆகி விட்டார்.
நான் அவரிடம் எப்போது கதை சொல்ல வேண்டும் என்று கேட்கும்போது என்னிடம் உங்களுக்கு எப்போது கதை சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறதோ, அப்போது சொல்லுங்கள்.
அவசரப்பட்டு சொல்ல வேண்டாம் என்று கூறி என் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தார்.
மேலும், பில்லா படத்தில் அஜித் கோட் சூட் அணிந்து நடித்தது மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது.
அதை தொடர்ந்து ஆரம்பம் படத்திற்கு டி-ஷர்ட் தான் என்று கூறினேன். அதற்கும், எதுவும் சொல்லாமல் நடித்து கொடுத்தார். அவரை போன்று ஒரு சிறந்த மனிதரை எங்கும் காண முடியாது” என்று கூறியுள்ளார்.