தளபதி 69
GOAT திரைப்படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் படம் தளபதி 69. விஜய் அரசியலுக்கு செல்லும் காரணத்தினால் தளபதி 69 தான் அவருடைய கடைசி படம் என கூறப்படுகிறது.
இப்படத்தை பிரபல முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஹெச். வினோத் இயக்கப்போகிறார் என தகவல் வெளிவந்துள்ளது. ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் தெரிவிக்கவில்லை.
அதே போல் இப்படத்தை யார் தயாரிக்க போகிறார் என்றும் இதுவரை அறிவிக்கவில்லை. இந்த நிலையில், தளபதி 69 திரைப்படம் கைவிடப்பட்டது. GOAT படத்தை முடித்த கையோடு விஜய் நேரடியாக அரசியலில் களமிறங்கவுள்ளார் என பேசப்பட்டு வருகிறது.
படம் கைவிடப்பட்டதா
ஆனால், இது உண்மையில்லை என்றும் விஜய்யின் கடைசி படமாக தளபதி 69 தான் இருக்கப்போகிறது என பிரபல தயாரிப்பாளர் தனஞ்சயன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
இதில் “GOAT திரைப்படத்திற்கு பின் விஜய் சார் கண்டிப்பாக தளபதி 69ல் நடிப்பார். அப்படத்தின் படப்பிடிப்பு இந்த வருடத்தின் இறுதி அல்லது அடுத்த வருடத்தின் துவக்கத்தில் ஆரம்பம் ஆகும். அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை சினிமாவில் தான் விஜய் கவனம் செலுத்தவுள்ளார். அதன்பின் முழுமையாக அரசியலில் என்ட்ரி கொடுப்பார்” என கூறியுள்ளார்.