சிறகடிக்க ஆசை
விஜய் டிவியின் ஹிட் தொடரான சிறகடிக்க ஆசை சீரியல் இன்று கலகலப்பான எபிசோடாக அமைந்துள்ளது.
அதாவது முத்து மற்றும் ரவி ஏதோ வேலையால் வீட்டிற்கு வரவில்லை, எனவே மீனா-ஸ்ருதி இருவரும் பேய் படம் பார்க்கிறார்கள்.
அதைப்பார்த்து விஜயா எனக்கு பேய் பார்த்து எல்லாம் பயம் கிடையாது, போய் படுங்கள் என இருவரையும் கத்திவிட்டு செல்கிறார்.
உடனே ஸ்ருதி, விஜயாவை பயமுறுத்த பேய் போல் சவுண்ட் வைத்து அவரை பயமுறுத்துகிறார். அவரை தாண்டி மனோஜும் அந்த சத்தம் கேட்டு பயப்படுகிறார்.
இன்றைய எபிசோட் கலகலப்பாகவே இருந்தது.
புரொமோ
பின் நாளைய எபிசோடின் புரொமோ வெளியானது. அதில் மீனா கையில் வைத்திருந்த எண்ணெய் ஸ்ருதியால் கீழே விழுகிறது, அந்த நேரம் வேகமாக நடந்துவந்த விஜயா கீழே விழ அவரை பிடிக்க சென்ற மீனாவும் விழுகிறார்.
பின் மனோஜ் தனது அம்மாவை தூக்க செல்ல அவரும் கீழே விழுகிறார். இன்றைய எபிசோடும் சரி, நாளைய எபிசோடின் புரொமோவும் சரி மிகவும் கலகலப்பாக உள்ளது.