சிறகடிக்க ஆசை
ஒரு ரூம் கட்ட வேண்டும் என்ற பிரச்சனை மின்னல் போல் வந்து வந்து செல்கிறது சிறகடிக்க ஆசை சீரியலில், ஆனால் பிரச்சனை முடிவ்தாக தெரியவில்லை.
நேற்றைய எபிசோடில் ஸ்ருதி அம்மா செக் கொடுத்து சகுனி வேலை செய்துவிட்டு சென்றார். இதனால் முத்து-மனோஜ் இடையே பெரிய சண்டையே நடந்தது. இறுதியில் அண்ணாமலை வருத்தப்பட்டது மட்டும் தான் நடந்தது.
பின் முத்து இதை காரணமாக வைத்து குடிக்க சென்றார்.
நாளைய புரொமோ
குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த முத்து தனது மனதில் இருந்ததை எல்லாம் கொட்டித்தீர்த்துள்ளார்.
என் அப்பா இங்கே இருக்கும் வரை நான் இருப்பேன், அவர் இங்கு இல்லை என்றால் நான் இந்த வீட்டு பக்கம் கூட வர மாட்டேன். எனக்கு இந்த வீடு, பணம் எதுவும் வேண்டாம், அப்பா மட்டும் தான் வேண்டும் என பேசுகிறார்.
பின் காலையில் முத்து சில விஷயங்களை பேச உடனே மீனா ரோஹினி சொன்ன வார்த்தையால் இவரே பணம் சம்பாதித்து வீடு கட்டுவார் என சபதம் போடுகிறார்.
நாளைய எபிசோட் புரொமோவில் முத்து, நீ தொடர்ந்து சபதமாக போட்டுக்கொண்டு செல்கிறாய், அதற்கான வேலையை செய்ய வேண்டாமா என காரை திறந்து ஏதோ காட்டுகிறார்.
அதைப்பார்த்து மீனா சந்தோஷப்படுகிறார், ஆனால் அது என்ன என்பது தெரியவில்லை. இதோ நாளைய எபிசோடுக்கான புரொமோ,