நாக சைதன்யா சோபிதா
தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நாக சைதன்யா. இவர் பிரபல நடிகர் நாகர்ஜூனாவின் மகன் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
நடிகை சமந்தா உடனான விவாகரத்துக்கு பின், நாக சைதன்யா பிரபல நடிகை சோபிதாவுடன் காதலில் இருக்கிறார், இருவரும் டேட்டிங் செய்து வருகிறார்கள் என கிசுகிசுக்கப்பட்டது. இருவரும் இணைந்திருக்கும் புகைப்படங்கள் கூட இணையத்தில் வைரலானது.
கடந்த சில மாதங்களுக்கு முன் தங்களுடைய காதலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். பின் நிச்சயதார்த்தம் விமர்சையாக நடைபெற்ற நிலையில், கடந்த 4ஆம் தேதி இருவருக்கும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்று முடிந்தது.
திருமணத்திற்கு பின் சென்ற இடம்
இந்த நிலையில், திருமணம் முடிந்த கையோடு, நாக சைதன்யா – சோபிதா தம்பதி, ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ இதோ..