சூப்பர் சிங்கர்
ரியாலிட்டி ஷோக்களுக்கு பிரபலமான தொலைக்காட்சி என்றால் அது விஜய் டிவி தான்.
பாடல், ஆடல், காமெடி, கேம் ஷோ என நிறைய ஒளிபரப்பாகிறது. ஒவ்வொரு வகையான நிகழ்ச்சிகளிலும் தங்களுக்கு என்ன வருமோ அதில் கலந்துகொண்டு போட்டிபோட்டு வருகிறார்கள்.
அப்படி விஜய் டிவியின் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் சூப்பர் சிங்கர். இந்த ரியாலிட்டி ஷோ மூலம் மக்களிடம் பிரபலமானவர்கள் பலர் உள்ளார்கள்.
ப்ரியா ஜெர்சன்
அப்படி பெரியவர்களுக்காக ஒளிபரப்பாகிய சூப்பர் சிங்கரில் அசத்தலாக பாடி டாப் 5ல் வந்தவர் தான் ப்ரியா ஜெர்சன். அண்மையில் இவர் தனது காதலரை உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டார்.
இந்த நிலையில் ப்ரியா ஜெர்சன் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். தனது புதிய காருடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.