GOAT
தளபதி விஜய் நடிப்பில் பிரமாண்டமான முறையில் கடந்த மாதம் வெளிவந்த திரைப்படம் GOAT. இப்படத்தை முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து இருந்தனர்.
யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவான இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரகாஷ், பிரபு தேவா, சினேகா, லைலா, மீனாட்சி, மோகன், ஜெயராம், பிரேம்ஜி, அஜ்மல், வைபவ் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள்.
மக்கள் மத்தியில் மாபெரும் அளவில் வரவேற்பை பெற்ற இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 430 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 200 கோடியை கடந்துள்ளது என்கின்றனர். ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஓடிடி ரிலீஸ்
இந்த நிலையில், திரையரங்கில் ரூ. 430 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ள GOAT திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை நெட்பிளிக்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
அதன்படி, வருகிற அக்டோபர் 3ஆம் தேதி GOAT திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாள, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒளிபரப்பாகும் என அறிவித்துள்ளனர். திரையரங்கில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட GOAT திரைப்படத்திற்கு ஓடிடி-யில் எந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.