தென்கொரியாவின் மத்திய உய்சோங் மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக, அந்நாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் விழிப்புடன் இருக்குமாறு
தென் கொரியாவில் உள்ள இலங்கை தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இலங்கைத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் அங்கு வசிக்கும் இலங்கையர்கள் அறிவுறுத்தப்படுத்தப்பட்டுள்ளனர்.
எரியக்கூடிய பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
காட்டுத்தீ காரணமாக ஏதேனும் அவசரநிலை அல்லது ஆபத்தை எதிர்கொள்ளும் இலங்கையர்கள் கீழே உள்ள தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி அறிவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
(+82-2) 735 2966
(+82-2) 735 2967
(+82-2) 794 2968
தென் கொரியாவில் பாரியளவில் காட்டுத்தீ பரவி வரும் நிலையில் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
மத்திய உய்சோங் மாவட்டத்தில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக 81,500 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தென் கொரியாவின் வரலாற்றில் மிகப்பெரிய ஒற்றை காட்டுத் தீயாக அமைந்துள்ளது.