Saturday, December 21, 2024
Homeசினிமாதேசிய விருதில் இருந்து சார்பட்டா பரம்பரை நிராகரிக்கப்பட்டது.. காரணத்தை கூறிய பா. ரஞ்சித்!

தேசிய விருதில் இருந்து சார்பட்டா பரம்பரை நிராகரிக்கப்பட்டது.. காரணத்தை கூறிய பா. ரஞ்சித்!


பா. ரஞ்சித்

அட்டகத்தி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பா. ரஞ்சித். இதனைத் தொடர்ந்து மெட்ராஸ், கபாலி, காலா போன்ற பல வெற்றிப்படங்களை இயக்கி தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர்.



இதை தொடர்ந்து, 2021- ல் ஓ.டி.டி மூலம் வெளிவந்து வெற்றி பெற்ற படம் தான் சார்பட்டா பரம்பரை. இதன் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த படத்திலும் ஹீரோவாக ஆர்யாவே நடிக்க உள்ளார் என தகவல்கள் வெளியானது.

தேசிய விருது? 



இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் சார்பட்டா பரம்பரை படம் சிலருக்கு பிடித்திருந்தாலும் ஒரு சிலருக்கு அந்த படத்தின் இரண்டாம் பாதி பிடிக்கவில்லை.

இதை தொடர்ந்து,விருது விழாக்களிலும் சார்பட்டா பரம்பரை படம் வெளிப்படையாக நிராகரிக்கப்பட்டது எனக்கு மிகவும் வருத்தத்தை கொடுத்தது எனவும் கூறினார்.


மேலும்,தேசிய விருது பட்டியலிலும் சார்பட்டா பரம்பரை படம் உள்ளேயே போக வில்லை. இதற்கு என்ன காரணம் என்று எனக்கு நன்றாக தெரியும் எனவும், என் படத்தை வேண்டுமென்றே நிராகரித்து விட்டனர் எனவும், இதற்கு சிலர் திட்டமிட்டு செயல்படுகிறார்கள் எனவும், அதற்கு என்ன காரணம் என்று என்னால் புரிந்து கொள்ள முடிகிறது எனவும் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

தேசிய விருதில் இருந்து சார்பட்டா பரம்பரை நிராகரிக்கப்பட்டது.. காரணத்தை கூறிய பா. ரஞ்சித்! | Pa Ranjith Talk About National Awards

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments