ஜூனியர் என்டிஆர் மற்றும் ஜான்வி கபூர் நடித்து இருக்கும் படம் தேவரா. வரும் வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 27ம் தேதி, இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.
அதற்கான ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன்பு சென்னையில் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
அடுத்து ஐதராபாத்தில் இருக்குக் Novotel ஹோட்டலில் ப்ரீ ரிலீஸ் விழா பிரம்மாண்டமாக இன்று நடைபெற இருந்தது.
ரசிகர்கள் ரகளை.. நிகழ்ச்சி ரத்து
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் மிக பிரம்மாண்டமாக செய்யப்பட்டு இருந்தது. அனிருத் மேடையில் பாட போகிறார் என்பதால் அதற்காக மிகப்பெரிய ஸ்டேஜ் ஒளி, ஒலி உடன் அமைக்கப்பட்டு இருந்தது.
இருப்பினும் நிகழ்ச்சியில் ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள் செய்த ரகளையால் மொத்த நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டது. அரங்கம் நிறைந்துவிட்டது என சொல்லி ஹோட்டல் நிர்வாகம் கேட்டை இழுத்து மூடி இருக்கிறது. அதனால் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டு ஹோட்டலை அடித்து நொறுக்க தொடங்கி இருக்கின்றனர்.
போலீசாரும் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.
#Devara Pre Release Event Cancelled!
— Christopher Kanagaraj (@Chrissuccess) September 22, 2024