நடிகர் அஜித்
தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் பல அவமானங்களை சந்தித்து உழைப்பாலும் நடிப்பின் மேல் உள்ள ஆசையாலும் அதை எதையும் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து உழைத்து தற்போது முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் ஜொலித்து கொண்டிருப்பவர் நடிகர் அஜித்.
நடிகர் அஜித்துக்கு தற்போது இருக்கும் ரசிகர் கூட்டம் ஏராளம். அவர் படங்களுக்காக பல ரசிகர்கள் தவம் இருந்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் நடிகர் அஜித் குறித்து தயாரிப்பாளர் பாலாஜி பிரபு ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.
அஜித் குறித்து தயாரிப்பாளர்
அதில், “அந்த காலத்தில் பிரபல இயக்குனராக இருந்த ஒருவர் அவருடைய பிறந்தநாளை ஒரு 5 ஸ்டார் ஹோட்டலில் பல முன்னணி நடிகர்கள், தயாரிப்பாளர்களுடன் கொண்டாடினர்.
அந்த இயக்குனருக்கு வாழ்த்து தெரிவிக்க அஜித் அந்த ஹோட்டல் வெளியில் பல மணி நேரம் காத்து கொண்டிருந்தார். அப்போது அந்த இயக்குனரின் உதவி இயக்குனராக இருந்தவர் அஜித் சாரிடம் வந்து இயக்குனர் தற்போது பிஸியாக உள்ளார், அதனால் சந்திக்க இயலாது என்று கூறினார்.
இதனை கேட்ட அஜித் சார் அந்த உதவி இயக்குனரிடம் “A day will come ” என்று கூறிவிட்டு அங்கு இருந்து கோவமாக சென்று விட்டார்.
இவை அனைத்தையும் நான் அங்கு இருந்து கவனித்து கொண்டிருந்தேன். பிறகு, அந்த இயக்குனர் அஜித்தை வைத்து ஒரு படம் இயக்க முயற்சி செய்தார் ஆனால் அவரால் கடைசி வரை இயலவில்லை என கேள்வி பட்டேன்”என்று கூறியுள்ளார்.