அஜித்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இதில் விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இதை முடித்தபின் குட் பேட் அக்லி திரைப்படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பில் இணைவார்.
நடராஜன்
இந்திய கிரிக்கெட் அணியில் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் தமிழ்நாட்டில் இருந்து பல போராட்டங்களுக்கு பின் இந்திய அணியில் இடம்பிடித்தார். தற்போது தமிழ்நாட்டில் இருந்து இந்திய கிரிக்கெட் அணிக்கு செல்லும் ஒவ்வொரு வீரர்களுக்கு இன்ஸ்பிரேஷன் ஆக மாறியுள்ளார்.
இவர் சமீபத்தில் தனது பிறந்தநாள் அன்று நடிகர் அஜித்தை நேரில் சந்தித்து இருந்தார். அந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
இதுகுறித்து கிரிக்கெட் கமென்டரியில் பேசிய நடராஜன் “எனக்கு அது ரொம்ப ஸ்பெஷல் பிறந்தாளாக மாறியது. அவரை சந்திக்க போறேன் என்று எனக்கு தெரியாது. என் டீம் உடன் நான் சென்று இருந்தேன். அப்போது சர்ப்ரைஸாக அவரை சந்திக்க வைத்தார்கள். அஜித் சார் ரொம்ப humble. நீங்க சொன்ன நம்ப மாட்டீங்க. நாங்கள் அனைவரும் கிளம்பும் பொழுது எங்கள் கார் கதவை திறந்து எங்களை அனுப்பி வைத்தார்” என அஜித் குறித்து பேசியுள்ளார் நடராஜன்.