Saturday, January 11, 2025
Homeசினிமாநடிகர் அஜித் உடல் எடையை குறைத்தது எப்படி தெரியுமா.. வெளிவந்த சீக்ரெட்

நடிகர் அஜித் உடல் எடையை குறைத்தது எப்படி தெரியுமா.. வெளிவந்த சீக்ரெட்


அஜித் குமார்

நடிகர் அஜித் குமார் தற்போது துபாயில் நடைபெறும் வரும் 24H ரேஸில் தனது டீம் உடன் கலந்துகொண்டுள்ளார். தன்னுடைய படங்களை முடித்துவிட்டு, ஏற்கனவே திட்டமிட்டபடி இதில் கலந்துகொண்டுள்ள அஜித் டீம், நேற்று நடைபெற்ற Qualification சுற்றில் 7ம் இடத்தை பிடித்தது.

நடிகர் அஜித் எப்படி சில மாதங்களிலேயே உடல் எடையை குறைத்து, மிகவும் ஸ்லிம்மாக மாறினார் என்கிற கேள்வி அனைவரின் மத்தியிலும் உள்ளது.

வெளிவந்த சீக்ரெட்

இந்த நிலையில், பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி, அஜித் உடல் எடை குறைத்தது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

நடிகர் அஜித் உடல் எடையை குறைத்தது எப்படி தெரியுமா.. வெளிவந்த சீக்ரெட் | Secret Behind Ajith Weight Loss

இதில் ” கார் ரேஸில் கலந்துகொள்ள தனது உடல் எடையை குறைக்க முடிவு செய்த நடிகர் அஜித், தொடர்ந்து மூன்று மாதங்களாக உணவு எதுவும் எடுத்துக்கொள்ளாமல், வெறும் வெந்நீர் மட்டுமே குடித்து வந்துள்ளார். அவ்வப்போது உடலுக்கு சத்தி வேண்டும் என்பதற்காக புரோட்டீன் பவுடர்களை, வைட்டமின் மாத்திரைகளையும் அஜித் பயன்படுத்தியுள்ளார். அதனால்தான் குறைந்த காலகட்டத்தில் இந்த அளவிற்கு உடல் எடையை அஜித்தால் குறைக்க முடிந்தது” என அவர் கூறியுள்ளார்.

அஜித் உடல் எடை குறைத்தது குறித்து பத்திரிகையாளர் பிஸ்மி பேசிய விஷயம் தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments