பவன் கல்யாண்
நடிகர் பவன் கல்யாண், தெலுங்கு சினிமா ரசிகர்களால் பவர் ஸ்டாராக கொண்டாடப்படும் மெகா ஸ்டார்.
கடந்த 1996ம் ஆண்டு Akkada Ammayi Ikkada Abbayi என்ற படத்தின் மூலம் நடிக்க தொடங்கியுள்ளார். அப்போது ஆரம்பித்த பவன் கல்யாண் பயணம் தொடங்கிய வேகத்திலேயே செம வளர்ச்சியை பெற்றது.
ரசிகர்கள் அனைவருமே பவர் ஸ்டார், பவர் ஸ்டார் என பெரிய அளவில் கொண்டாடினார்கள். 28 படங்களுக்கு படங்களுக்கு மேல் நடித்துள்ள பவன் கல்யாண் சொந்த வாழ்க்கை பற்றியும் மக்களுக்கு தெரிந்தது தான்.
2 முறை திருமணம் செய்துகொண்டு விவாகரத்தானவர் 3வதாக Anna Lezhneva என்பவரை கடந்த 2013ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். சினிமாவை தாண்டி அரசியலிலும் களமிறங்கி மாஸ் காட்டி வருகிறார்.
சொத்து மதிப்பு
இன்று தனது 56வது பிறந்தநாள் கொண்டாடும் பவன் கல்யாண் தற்போது ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சட்டசபை தேர்தலுக்காக மனுத்தாக்கல் செய்யும்போது பவன் கல்யாண் தனது சொத்து விவரத்தை தாக்கல் செய்தார்.
அதில் தனக்கு 46.17 கோடி அசையும் சொத்துக்களும், 118.36 கோடி அசையா சொத்துக்களும் இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார்.
இதன்மூலம் தனக்கு மொத்தமாக ரூ.164 கோடி சொத்துக்கள் இருப்பதாக பவன் கல்யாண அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார்.