Wednesday, January 15, 2025
Homeசினிமாநடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியாகும் அடுத்த படம் .. புது அப்டேட் இதோ!

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியாகும் அடுத்த படம் .. புது அப்டேட் இதோ!


சூரி நாயகனாக நடித்த விடுதலை மற்றும் கருடன் படங்கள் வெளிவந்து மிகப்பெரிய வசூலையும் வரவேற்பையும் சூரிக்கு பெற்றுக் கொடுத்ததை தொடர்ந்து, அவர் நாயகனாக தற்போது மூன்றாவது படத்திலும் நடிக்கவுள்ளார்.

கொட்டுக்காளி 

அவர் அடுத்து நடிக்க போகும் படம் கொட்டுக்காளி. இந்த படம் வரும் ஆகஸ்ட் 23ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.



இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக அன்னா பென் நடிக்கவுள்ளார். இவர் மலையாளத்தில் 2019-ம் ஆண்டு வெளியான கும்பளங்கி நைட்ஸ் என்ற திரைப்படம் மூலம் என்ட்ரி கொடுத்தவர் அன்னா பென். முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான சைமா விருதை பெற்றுள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியாகும் அடுத்த படம் .. புது அப்டேட் இதோ! | Anna Ben About Kottukkaali And Kalki 2898 Ad  



இந்நிலையில் தற்போது சூரியின் கொட்டுக்காளி படம் மூலம் தமிழில் என்ட்ரி கொடுக்க உள்ளார் அன்னா பென். இந்த படம் குறித்து அடுத்தடுத்த பேட்டிகளை அன்னா பென் கொடுத்து வருகிறார். இந்த படம் கூழாங்கல் படத்தை கொடுத்து கோலிவுட்டில் கவனத்தை ஈர்த்துள்ள வினோத் ராஜ் இயக்குகிறார்.

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியாகும் அடுத்த படம் .. புது அப்டேட் இதோ! | Anna Ben About Kottukkaali And Kalki 2898 Ad



மேலும், இந்த படத்தை சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார். அதனால் இந்த படத்திற்கான எதிர்ப்பார்ப்பு மிகப்பெரிய அளவில் உள்ளது. ரிலீசுக்கு முன்னதாகவே பல சர்வதேச திரைப்பட விழாக்களில் இந்த படம் விருதுகளை குவித்துள்ளது.

அன்னா பென் பேட்டி


இந்த படம் குறித்து அடுத்தடுத்த பிரமோஷன்களை அன்னா பென் மேற்கொண்டு வருகிறார். அப்போது நடந்த பேட்டியில் அவர் கொட்டுக்காளி மற்றும் தெலுங்கில் கல்கி 2898 ஏடி படங்கள் குறித்து பேசியுள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியாகும் அடுத்த படம் .. புது அப்டேட் இதோ! | Anna Ben About Kottukkaali And Kalki 2898 Ad

கல்கி படத்தில் இயற்கையான விஷயங்கள் எதுவுமே இல்லை என்றும் செட்களில் மட்டுமே அடுத்தடுத்த காட்சிகள் எடுக்கப்பட்டன என்றும் அதனால் செயற்கை தனமான காட்சிகளிலேயே நடிக்க முடிந்தது என்றும் ஆனால் கொட்டுக்காளியில் இயற்கையோடு இணைந்து தான் நடித்துள்ளதாகவும் அன்னா பென் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments