கன்னட சினிமாவில் முன்னணி ஹீரோ சிவ ராஜ்குமார். அவர் ரஜினியின் ஜெயிலர் படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்து இருந்தார்.
தனுஷ் உடன் கேப்டன் மில்லர் படத்திலும் நடித்து இருக்கிறார் அவர். விஜய்யின் தளபதி 69 படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்க அவரை முதலில் ஹெச்.வினோத் அணுகியதாகவும் தகவல் வந்தது. ஆனால் அவர் அந்த படத்தில் நடிக்கவில்லை என மறுத்து இருந்தார்.
புற்றுநோய்.. அமெரிக்காவில் சிகிச்சை
நடிகர் சிவ ராஜ்குமாருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக வந்திருக்கும் தகவல் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து இருக்கிறது.
கடந்த ஆறு மாதங்களாக இந்தியாவிலேயே சிகிச்சை பெற்ற அவர், அறுவை சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு தற்போது சென்று இருக்கிறார்.
அவர் குணமாகி விரைவில் திரும்ப வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.