சூர்யா – கார்த்தி
அண்ணண் தம்பி பாசம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருப்பவர்கள் நடிகர் சூர்யா மற்றும் அவரது தம்பி கார்த்தி.
அண்ணண் தம்பி என்பவர்கள் ராமர், லட்சுமணன் போல இருக்க வேண்டும் என்று அவர்கள் தந்தையும் ,பழம்பெரும் நடிகருமான சிவகுமார் நன்றாக சொல்லி கொடுத்து வளர்த்து இருக்கிறார்.
நடிகர் சூர்யாவின் பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தும் கொண்டாடியும் வருகின்றனர்.
பிறந்தநாள் வாழ்த்து
இந்த நிலையில் நடிகர் சூர்யாவின் தம்பி நடிகர் கார்த்தி அவர் அண்ணனுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார்.
அதில், “ஹாப்பி பர்த்டே அண்ணா ,நீங்கள் தான் எனக்கு ஜீரோவில் இருந்து ஹீரோவாக விடாமுயற்சியும்,கடின உழைப்பும் இருந்தால் கண்டிப்பாக சாதிக்க முடியும் என்பதை, சாதித்து காட்டியவர்” என குறிப்பிட்டுயிருக்கிறார்.
அதுமட்டும் இல்லாமல் அன்பை மட்டும் பரப்பும் ரசிகர்களுக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார்.
Happy birthday to the man who taught me that even if u start from zero anything could be learnt and achieved through commitment and hard work. Loads and loads of love to the anbana fans who are spreading so much love in the society. 🤗@Suriya_offl #HappyBirthdaySuriya pic.twitter.com/b1fH37qQtv
— Karthi (@Karthi_Offl) July 23, 2024