பகத் பாசில்
தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் பகத் பாசில். மலையாள திரையுலகம் மூலம் அறிமுகமான இவர் தற்போது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார்.
தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த வேலைக்காரன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதன்பின் சூப்பர் டீலக்ஸ், விக்ரம், மாமன்னன் ஆகிய படங்களில் நடித்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் பகத் பாசில் நடிப்பில் ஆவேசம் எனும் திரைப்படம் வெளிவந்து மாபெரும் வசூல் வேட்டையாடியது. அதுமட்டுமின்றி மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டது.
சொத்து மதிப்பு
இந்த நிலையில், ரசிகர்களால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடி வரும் நடிகர் பகத் பாசில் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, நடிகர் பகத் பாசிலின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 50 கோடிக்கும் மேல் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.