தெலுங்கு நடிகரும், ஆந்திர துணை முதலமைச்சருமான பவன் கல்யாணின் மூன்றாம் மனைவி அண்ணா.
Anna Lezhneva ரஷ்யவை சேர்ந்த மாடல். அவரை பவன் கல்யாண் காதலித்து மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு மார்க் ஷங்கர் என்ற ஒரு மகன் இருக்கிறார்.
மார்க் ஷங்கர் தற்போது சிங்கப்பூரில் இருக்கும் ஒரு பள்ளியில் படித்து வருகிறார்.
தீ விபத்து
இன்று மார்க் ஷங்கர் படிக்கும் பள்ளியில் நடந்த தீவிபத்தில் அவர் சிக்கி காயம் அடைந்து இருக்கிறார். கை மற்றும் கால் பகுதியில் தீக்காயம் ஏற்பட்டு இருக்கிறது.
பவன் கல்யாண் இதனால் இன்று தனது பணிகள் அனைத்தையும் ரத்து செய்துவிட்டு உடனே சிங்கப்பூருக்கு கிளம்பி சென்று இருக்கிறார்.