வனிதா விஜயகுமார்
நடிகை வனிதா விஜயகுமார் பெயரை கேட்டாலே சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை அனைவரும் அறிவார்கள். தற்போது நடிகர் பிரசாந்த் நடித்துள்ள அந்தகன் படத்தில் வனிதா நடித்திருக்கிறார்.
வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளி வர இருக்கும் இந்த படத்தின் புரோமோஷன் வேலைகள் நடைப்பட்டு வருகிறது.
வனிதா அவர்கள் ஆகாஷ் என்பவரை தான் முதலில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விஜய் ஸ்ரீ ஹரி என்ற மகன் உள்ளார்.
பின்பு வனிதா மற்றும் ஆகாஷ் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். விவாகரத்துக்கு பின்பு தன் தந்தையுடன் சென்று விட்டார் ஸ்ரீ ஹரி.
கடந்த வாரம் ஸ்ரீஹரி ஹீரோவாக அறிமுகமாகவுள்ள மாம்போ படத்தின் First லுக் மற்றும் கதாநாயகன் அறிமுக விழா நடைபெற்றது. அங்கு ஸ்ரீ ஹரியை அறிமுகம் செய்ய வனிதா விஜயகுமாரின் அப்பாவும், ஸ்ரீஹரியின் தாத்தாவுமான நடிகர் விஜயகுமார் வந்திருந்தார்.
மேலும், நடிகர் ரஜினிகாந்த் தான் இந்த கதையைக் கேட்டு, கதை நன்றாக உள்ளது என்றும் இந்த படத்தில் ஸ்ரீ ஹரி நடித்தால் நன்றாக இருக்கும் என்று கூறியதாக அவர் பேசியிருந்தார்.
ஸ்ரீ ஹரி குறித்து பேசிய வனிதா
இந்த நிலையில், அந்தகன் படம் புரோமோஷனில் கலந்து கொண்ட வனிதா விஜயகுமாரிடம், ஸ்ரீஹரி கதாநாயகனாக நடிக்கும் படம் குறித்தும், அவர் சினிமாவில் அறிமுகமானதை குறித்தும் கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த வனிதா, “தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பார்கள். என் மகனுக்கு அவ்ளோ பெரிய மேடை கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கவில்லை. நல்ல நிறுவனம் மற்றும் பெரிய இயக்குனர் படத்துல அறிமுகம் ஆகிறான். ஸ்ரீஹரியை பற்றி நினைக்கும் போது மிகவும் பெருமையாக உள்ளது” என்றும் கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில், நான் செய்த பிரார்த்தனை வீண் போகவில்லை. என் மகன் நடிகராக மாறி இருக்கிறார் அதற்கு வாழ்த்துக்கள் என்று ஸ்ரீஹரியை டேக் செய்து குறிப்பிட்டுயிருக்கிறார். மேலும் கதை கேட்டு தன் மகனை ஆசீர்வாதம் செய்த ரஜினி அங்கிள் அவருக்கும் நன்றி என்ன குறிப்பிட்டுள்ளார்.