ரஜினிகாந்த்
இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களிவ் ஒருவர் இளையராஜா.
இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் இசையமைத்த முதல் படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் திரும்பி பார்க்க வைத்தார்.
இளையராஜா எவ்வளவு பெரிய புகழின் உச்சியில் இருக்கிறாரோ அதே அளவு பல சர்ச்சைகளையும் சந்தித்தவர்.
தற்போது இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க இருக்கிறார், அப்படம் எப்படி இருக்கும் என்பதை காண ரசிகர்களும் ஆர்வமாக தான் உள்ளார்கள். இவர் இசையமைப்பில் அடுத்ததாக விடுதலை படத்தின் இரண்டாவது பாகம் வரவிருக்கின்றது.
வெளிவராத தகவல்
இந்நிலையில், இளையராஜா இயக்குநர் கௌதம் மேனனுடன் செய்த உரையாடல் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
அந்த வீடியோவில், ஒருமுறை நடிகர் ரஜினிகாந்த் என்னிடம் வந்து பாஸ்கருக்கு அதாவது( இளையராஜாவின் சகோதரர்) அவருக்கு ஒரு படம் பண்ணிதரேன், அதை நீங்களே இயக்குங்கள் என்றும் அந்த படத்துக்கு ஒரு நல்ல பெயர் வையுங்கள் என்றும் கூறினார்.
அதை கேட்ட நான் ராஜாதி ராஜா என்ற பெயர் சொன்னேன். உடனே ரஜினிகாந்த் ஏன் ராஜாதி ராஜா என்று கேட்டார். அதற்கு, நான் ராஜா என்னைவிட பெரிய ஆள் நீங்கள், அதனால் நீங்கள் ராஜாதி ராஜா என்று கூறினேன்.
ரஜினி மிகவும் மகிழ்ச்சியடைந்தார், மேலும், இந்த பெயர் நல்லா இருக்கிறது என்றார்.
ராமனாகிய நீங்கள் இந்த படத்தை இயக்க, ராவணனாகிய நான் நடிக்க, பார்க்க சூப்பரா இருக்கும் என்று சொன்னார். உடனே நான், செட்டில் டைரக்ட் செய்யும்போதுதான் யார் ராவணன், யார் ராமன் என்று தெரியும் என்று சொன்னேன்.
ஆனால் சில காரணங்களால் அந்தப் படத்தை கடைசி வரை என்னால் இயக்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.