நடிகர் விஜய்
நடிகர் விஜய், தமிழ் சினிமா எதிர்ப்பார்க்காத ஒரு விஷயத்தை அறிவித்து ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதை வருத்தப்பட வைத்துவிட்டார்.
அவர் அரசியலில் களமிறங்குவது அனைவருக்குமே சந்தோஷம் தான், ஆனால் தனது 69வது படத்திற்கு பிறகு இனி நடிக்க மாட்டேன் என அவர் கூறியிருப்பது ரசிகர்களுக்கு வருத்தம் தான்.
இப்போது நடிகர் விஜய்யின் 68வது படமான கோட் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து இப்போது புரொமோஷன் வேலைகள் நடக்கிறது.
வரும் ஆகஸ்ட் 3வது வாரத்தில் படத்தின் டிரைலர் வெளியாகும் என கூறப்படும் நிலையில் செப்டம்பர் 5ம் தேதி படம் வெளியாக இருக்கிறது.
மாரி செல்வராஜ்
மாமன்னன் என்ற வெற்றிப்படத்தை கொடுத்த மாரி செல்வராஜ் இப்போது வாழை என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். அந்தப் படம் முழுக்க முழுக்க சிறுவர்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் படமாம்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் மாரி செல்வராஜ் பேசும்போது, சிறு வயதில் இருந்தே நான் விஜய்யின் தீவிரமான ரசிகர், மன்றமெல்லாம் வைத்திருக்கிறேன்.
அவர் நடிப்பில் இருந்து விலகுகிறேன் என்று அறிவித்திருப்பதை நான் எதிர்ப்பார்க்கவே இல்லை, என்னால் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை என்று பேசியுள்ளார்.