விஜய்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய். இவர் நடிப்பில் தற்போது GOAT திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார்.
இப்படம் செப்டம்பர் வெளியாகும் என அறிவித்துள்ளனர். சமீபத்தில் தான் இப்படத்திலிருந்து கிலிம்ப்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு படக்குழு சர்ப்ரைஸ் கொடுத்தது.
GOAT திரைப்படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் தளபதி 69. இப்படத்தை ஹெச். வினோத் இயக்கப்போவதாக கூறப்படுகிறது. மேலும் இது விஜய்யின் கடைசி படம் என்றும் சொல்லப்படுகிறது.
மனைவி சங்கீதாவுடன் விஜய்
நடிகர் விஜய் 1999ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு சஞ்சய் மற்றும் திவ்யா என இரு பிள்ளைகள் உள்ளனர். விஜய்யின் அன்ஸீன் வீடியோ அல்லது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.
அந்த வகையில் தற்போது விஜய் தனது மனைவி சங்கீதாவுடன் திருமண விழா ஒன்றில் பங்கேற்ற போது எடுத்த வீடியோ ஒன்று தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..
Love – How he hold her hand 😍❤️🤲 pic.twitter.com/0aBMnw2zt9
— User Not Available(Afghanistan Ka Parivar) (@barathraina__) June 23, 2024