பிரபல நடிகர் ஸ்ரீயின் உடல்நிலை மோசமாகி எலும்பும் தோலுமாக இருக்கும் ஸ்டில்கள் வைரல் ஆன நிலையில், அவருக்கு தயாரிப்பாளர் சரியான சம்பளம் தரவில்லை என நெட்டிசன்கள் புகார் கூறினார்கள்.
இறுகப்பற்று பட தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவை நெட்டிசன்கள் தாக்கி கமெண்ட் செய்து வந்த நிலையில் அவர் தற்போது சர்ச்சைக்கு பதில் கொடுத்து இருக்கிறார் .
தொடர்பு கொள்ள முடியவில்லை
நடிகர் ஸ்ரீ உடல்நிலை பற்றி நாங்களும் கவலை கொண்டிருக்கிறோம். அவர் குடும்பம், நண்பர்கள் மட்டுமின்றி நாங்களும் அவரை கண்டுபிடிக்க நீண்டகாலமாக முயற்சி செய்கிறோம்.
இதை பற்றி பல ஊகங்கள் அடிப்படையிலான செய்தி பரவுவது துரதிஷ்டவசமானது. ஸ்ரீயை கண்டுபிடித்து மீண்டும் அவரை பழைய நிலைக்கு மாற்றுவது தான் முதலில் அவசியம். அதை செய்ய உயராவது உதவினால் நன்றாக இருக்கும் என கூறி இருக்கிறார்.
We ar genuinely concerned about the health and well being of Shri. His family and friends including us are trying to reach him for a long time. It is so unfortunate that there is so much speculation forming around it. But reaching Shri and bring him back to good health will be…
— SR Prabu (@prabhu_sr) April 14, 2025