குஷி கபூர்
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானவர் நடிகை குஷி கபூர். தன் அம்மாவை போன்று சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க முயன்று வருகிறார்.
அந்த வகையில், தமிழில் வெளியான ‘லவ் டுடே’ படத்தின் இந்தி ரீமேக்கான ‘லவ்யப்பா’ மற்றும் சயிப் அலிகானின் மகன் இப்ராகிம் அலிகானுடன் ‘நாடானியன்’ என இரண்டு படங்களில் நடித்திருக்கிறார்.
இந்த இரண்டு படங்களுமே இவருக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெற்று தரவில்லை.
செய்த செயல்
இந்நிலையில், மும்பை விமான நிலையத்திற்கு வெளியே சிறுவர்களால் குஷி கபூர் சூழப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதில், ” பல சிறுவர்கள் குஷி கபூர் வந்த காரை மறித்து தொலைபேசிகளை அசைத்து, குஷியிடம் செல்பி எடுக்க காத்திருந்தனர். அப்போது குஷி கபூர் கண்ணாடியை இறக்கி அவர்களுடன் கைகுலுக்கி உள்ளார்.
#KhushiKapoor PR, 2 steps ahead of #VeerPahariya
Fans
pic.twitter.com/VAaamDnOlq
— Movie_Reviews (@MovieReview_Hub) April 4, 2025