நடிகை அனுஷ்கா
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் அனுஷ்கா. இவர் கடந்த
2011 -ம் ஆண்டு வெளியான அருந்ததி படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
சினிமாவிற்கு வந்த ஆரம்பத்திலேயே பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வந்தார், அதில் வெற்றியும் அடைந்தார்.
அவரது ஜாதகத்தில் சில தோஷங்கள் இருப்பதால் சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்த அனுஷ்கா, மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி என்ற படத்தின் மூலமாக கம்பேக் கொடுத்திருந்தார்.
திருமணமா ?
தற்போது அனுஷ்கா பற்றி ஒரு தகவல் இணையத்தில் பரவி வருகிறது.
அது என்ன வென்றால், இப்போது 42 வயதாகும் அனுஷ்கா விரைவில் ஒரு துபாய் தொழில் அதிபரை திருமணம் செய்து கொள்ள உள்ளார் எனவும், அது குறித்த பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் டோலிவுட் வட்டாரத்தில் செய்திகள் பரவி வருகிறது.
இணையத்தில் பரப்பப்படும் இந்த தகவலில் எந்த அளவுக்கு உண்மை தன்மை இருக்கிறது என்று தெரியவில்லை.