ஆலியா பட்
இந்தி சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆலியா பட். பிரபல இயக்குனர் மகேஷ் பட்டின் மகளான இவர் மிக இளம் வயதிலேயே நடிக்க வந்துவிட்டார்.
தன்னை விட 10 வயது மூத்த நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு ராகா என்ற ஒரு அழகான மகள் இருக்கிறார்.
ஆலியா பட் நடிப்பில் வெளியான ஹைவே, உட்தா பஞ்சாப், டியர் ஜிந்தகி, ராஜி, கல்லி பாய், ராக்கி ராணி ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அவருக்கு கொடுத்தது.
ஆனால், கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ஜிக்ரா திரைப்படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு வரவேற்பு பெறவில்லை.
இந்நிலையில், உருவக்கேலியால் பாதிக்கப்பட்ட ஆலியா அவரது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு கோவமான பதிவை வெளியிட்டுள்ளார்.
பதிவு
அதில், ” இது போன்ற தவறான தகவல்களை ஏன் பரப்புகிறீர்கள்?. ஒரு நடிகையின் முக அமைப்பை வைத்து பேசுவதில் என்ன ஆர்வம் உள்ளது என்று எனக்கு ஒன்றும் புரியவில்லை. இதனால் நான் முடங்கி விடுவேன் என்று எண்ணாதீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.