நடிகை எமி ஜாக்சன் மதராசபட்டினம் படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் தற்போது அவர் அதற்கு பிறகு தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடிக்க தொடங்கினார்.
மேலும் ஹாலிவுட்டில் Supergirl சீரிஸில் அவர் நடித்து இருக்கிறார்.
ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு எமி ஜாக்சன் அவரது காதலர் Andreas Panayiotou உடன் குழந்தை பெற்றுக்கொண்டார். அவர்கள் நிச்சயதார்த்தம் மட்டுமே செய்து இருந்த நிலையில் அதன் பின் பிரிந்துவிட்டனர்.
திருமணம்
தற்போது எமி ஜாக்சன் அவரது புது காதலர் Ed Westwick உடன் திருமணம் செய்துகொண்டு இருக்கிறார்.
திருமண புகைப்படங்களை வெளியிட்டு “The journey has just begun” என எமி ஜாக்சன் குறிப்பிட்டு இருக்கிறார்.