காஜல் அகர்வால்
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். இவர் தமிழில் அஜித், விஜய், சூர்யா என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
அடுத்ததாக இந்தியன் 3 படத்தில் உலகநாயகன் கமல் ஹாசனுடன் இணைந்தும் நடித்துள்ளார். மேலும் இவர் தெலுங்கில் உருவாகி வரும் கண்ணப்பா எனும் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமின்றி ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடித்து வரும் சிக்கந்தர் படத்திலும் காஜல் அகர்வால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம்.
காஜல் அகர்வாலின் மகன்
நடிகை காஜல் அகர்வாலுக்கு கடந்த 2020ஆம் ஆண்டு பிரமாண்டமான முறையில் கவுதம் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. 2022ஆம் ஆண்டு அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
இந்த நிலையில், காஜல் அகர்வால் மகனின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்றை வெளிவந்து வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்க்கும் ரசிகர்கள் பலரும், காஜல் அகர்வாலின் மகனா இது, நன்றாக வளர்ந்துவிட்டாரே என கூறி வருகிறார்கள்.
இதோ அந்த வீடியோ..