கீர்த்தி சுரேஷ் திருமணம்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் கீர்த்தி சுரேஷ். இவர் தனது காதலருடன் திருமணம் செய்துகொள்ளப்போவதாக கடந்த சில வாரங்களுக்கு முன் தகவல் வெளிவந்தது.
இந்த தகவல் இணையத்தில் உலா வந்த நேரத்தில், நடிகை கீர்த்தி சுரேஷ் தனது காதலை உறுதி செய்யும் வகையில் புகைப்படத்தை வெளியிட்டார். இதன்மூலம் இது வதந்தி இல்லை, உண்மை தான் என தெரியவந்தது.
இன்று தனது 15 வருட காதலரான ஆண்டனி என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ். பிரம்மாண்டமாக நடந்து முடிந்த இந்த திருமணத்தின் புகைப்படங்களை நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சமுக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.
கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் விஜய்
இந்த நிலையில், கோவாவில் நடக்கும் கீர்த்தி சுரேஷ் – ஆண்டனி திருமணத்தில் நடிகர் தளபதி விஜய் கலந்துகொண்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..
கீர்த்தி சுரேஷ் மற்றும் விஜய் இருவரும் இணைந்து பைரவா மற்றும் சர்கார் ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.