நடிகை குஷ்பு
தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகைகள் ஒவ்வொருவரும் ஒரு விதம்.
அப்படி எந்த விஷயமாக இருந்தாலும் தைரியமாக பேசி அதனால் ஏற்படும் பிரச்சனைகளையும் தில்லாக சமாளித்து கலக்கக்கூடிய ஒரு நடிகை தான் குஷ்பு.
தமிழில் வருஷம் 16 திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி 80 மற்றும் 90களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து டாப் நாயகியாக வலம் வந்தார்.
பீக்கில் இருந்தபோதே இயக்குனர் சுந்தர்.சியை காதலித்து திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு அவந்திகா மற்றும் அனந்திடா என இரு மகள்கள் உள்ளனர்.
லேட்டஸ்ட் போட்டோ
நடிகை குஷ்பு நடிகை என்பதை தாண்டி அரசியல்வாதியாகவும் இருந்து வருகிறார்.
ஒரு கட்சியில் முக்கிய பொறுப்பு வகித்துவந்த குஷ்பு திடீரென அதில் இருந்து விலகுவதாக கூறி ஷாக் கொடுத்தார்.
இந்த நிலையில் தன்னுடைய காலில் மிகப்பெரிய கட்டோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
தொடை வரை கட்டப்பட்டுள்ள க்ரிப் பேண்டுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு நான் மற்றும் என்னுடைய பெஸ்டி மிகச்சிறந்த காம்போ என பதிவிட்டுள்ளார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் சீக்கிரம் குணமாக வேண்டும் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.